அரச ஊழியர்கள் போராட்டம் செய்தால் சிறை செல்லவேண்டி வரும்! – ஆளும் கட்சி எம்.பி மிரட்டல்

நாடு தற்போது உள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கும் சம்பளம் குறைக்கலாமே தவிர அதிகரிக்க முடியாது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், உர பிரச்சனையை பார்த்தால் ,யூரியாவை கொடுக்கலாம் என்ற நிலைப்பாடு உள்ளது.ஆனாலும் இயற்கை பசளையே சிறந்தது.

அடுத்து இப்போது பேசப்படும் விடயம் டொலர் பற்றாக்குறை.
இந்த பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும்.

அத்துடன் நாட்டில் வேலை செய்கின்ற அனைத்து உழியர்களிற்கு இப்போது சம்பளம் குறைக்க வேண்டுமே தவிர அதிகரிப்பு இல்லை.அதற்காக போராட்டம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

நம் நாட்டிற்கு இப்போது முக்கியமாக தேவைப்படுவது வெளி நாட்டு பங்களிப்பு
அங்கு ‘அதானி’ என்பவர் ஒரு சிறந்த தொழில் அதிபர் அவர் மூலம் பல நன்மைகளை நம் நாட்டிற்கு பெற முடியும்.

இதேவேளை எரிவாயு வெடிப்பு பிரச்சினைக்கும் ஜனவரி 1 முதல் தீர்வுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply