நத்தார் பண்டிகையை முன்னிட்டு நல்லிணக்க விஜயம்

வாழ்த்துக்களை தெரிவிக்கும் நோக்கில், புத்தளம் மாவட்ட சர்வமத குழுவினர், புத்தளத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு நல்லிணக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

புத்தளம் மாவட்ட சர்வமத குழுவின் இணைத் தலைவர்களான புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ வெங்கட சுந்தரராமக் குருக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தைச் சேர்ந்த உதுவாதன குசல தம்ம ஹிமி, இணைப்பாளர் உவைஸ் முஸ்னியா, பொருளாளர் ஏ.சி.எம்.ருமைஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, புத்தளம் சாந்த மரியா கத்தோலிக்க தேவாலயத்திற்கு விஜயம் செய்த சர்வமத குழு, புத்தளம் பங்குத் தந்தை அருட்திரு பயஸ் கெனடி பர்னாந்து அவர்களை சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினர்.

அத்துடன், புத்தளம் பரி. கிளமெந்துவின் ஆலயத்திற்கும் விஜயத்தை மேற்கொண்ட புத்தளம் மாவட்ட சர்வமத குழுவினர் கனம் அருட்பணி ரட்னமலர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Leave a Reply