நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கமே காரணம் – திருகோணமலையில் வாகனப் பேரணி!

<!–

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கமே காரணம் – திருகோணமலையில் வாகனப் பேரணி! – Athavan News

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது.

கந்தளாயில் இருந்து ஆரம்பித்து திருகோணமலை நகரை வந்தடைந்த குறித்த பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருண் ஹேமச்சந்திரா, நாட்டில் நிலவி வருகின்ற பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசிய பொருற்களின் விலையேற்றம் என்பவற்றுக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.


Leave a Reply