வவுனியா கணேசபுரத்தில் சௌபாக்கியா வேலைத்திட்டம்

சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 200,000 சமுர்த்தி குடும்பங்களை வலுவூட்டும் கருத்திட்டத்தில் வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24) கணேசபுரத்தில் இடம்பெற்றது.

இதன் போது திரியபியச திட்டத்தின் கீழ் செல்வி வீரசிங்கம் சந்திரிக்காவிற்கு 2 இலட்சம் பெறுமதியான வீடு ஒன்று கையளிக்கப்பட்டது.

அத்தோடு பயனாளிகளுக்கான வாழ்வாதார உள்ளீடுகளும், காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், உயர்தர மாணவர்களிற்கான சித்திர புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாஸன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், பிரதேசசபை உறுப்பினர் இராமகிருஷ்ணன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன், மாவட்ட சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் திருமதி முரளீதரன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி சந்திரகுமார், மற்றும் கிராமசேவகர், மற்றும் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply