வடக்கில் கரையோர மீனவர்கள் முற்றாக,அகற்ற வேண்டும் என்று சில சிங்கள அரசின் கீழ் வேலை செய்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
போர் நிறைவடைந்த காலம் முதல் வடக்கு மீனவர்களின் துயரம் தொடர்கிறது.வலைகள்,உடைமைகள் என பலவற்றை இழந்துள்ளனர்.
இலங்கை அரசும்,கடற்படையும் இணைந்து திட்டமிட்டு தான் இந்த எல்லைமீறல்களை அனுமதிக்கின்றனர்.
இதன் நோக்கம் வடக்கு கரையோர பரப்புகளிருந்து மீனவர்களை அகற்றுவதே ஆகும்.
எமது மீனவர்களின் வளங்களை அழிக்கவே வேண்டும் என்று இந்திய மீனவர்களை இலங்கை கடல் பரப்புக்குள் கடற்படையினர் அனுமதிக்கின்றனர்.
அத்துடன் தமிழ் அமைச்சராக டக்ளஸ் தேவானாந்தா இருந்துகொண்டு இதற்கு துணை போகின்றார்.
அவர் அமைச்சராக பதவியேற்று 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில்,இன்னமும் இந்திய மீன்வர்களின் அத்துமீறல் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை .
மானமுள்ள தமிழராக இருந்தால் அவர் எப்பவோ பதவி விலகியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.






