வடக்கு கிழக்கில் எமது அரசு இதுவரை 6 ஆயிரம் வீடுகளை இதுவரை அமைத்து கொடுத்தமை பாரிய வெற்றியென ஆளும் கட்சியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எமது அரசு மக்களுக்கு பாரிய அபிவிருத்தி பணிகளை செய்து கொடுத்துள்ளது.
அதன் ஒரு வெற்றியாக வடக்கு கிழக்கில் 6 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
கிரவல் வீதிகளை அமைத்து தந்தாலே போதும் என்று கிராம மக்கள் கூறிய நிலையில்,நாம் காப்பெட் வீதிகளை அமைத்துக்கொடுத்துள்ளோம். அரசு மக்களுடன் இணைந்துள்ளது.
அந்தவகையில் தான் கிராம மட்டத்தில் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர்.
நாட்டின் பொருளாதாரம் மந்த கதியில் இருந்தாலும் திறமையான நிதி அமைச்சர் தரமான வரவு செலவு திட்டத்தை தயாரித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த வருடத்தில் இதோ வருகிறது என என்றார்கள் அபிவிருத்தி திட்டங்கள், ஆனால் ஒன்றுமே செய்யவில்லை.
இம்முறை நாம் செய்து காட்டியுள்ளோம்.நாம் அபிவிருத்தி செய்யும் தலைமைகளுடன் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.






