யாழில் வாள் வெட்டு வன்முறையில் ஈடுபட்ட கும்பலின் இருவர் கைது!

கோண்டாவில் மற்றும் கொக்குவில் பகுதியில் வாள் வெட்டு வன்முறையில் ஈடுபட்ட கும்பலின் இருவர் பொலிசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் இராமகிருஸ்னா வித்தியாசாலைக்கு அருகில் ஒரு விட்டில் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் அந்த வீட்டில் இருந்த ஓர் மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்று சேதமாக்கிச் சென்றது.

இதேபோன்று, கொக்குவில் பகுதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த கும்பல் மகனை தேடியபோது அவர் இல்லாத நிலையில், வீட்டில் இருந்த தந்தை மீது வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

கொக்குவிலில் வாள் வெட்டிற்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் இந்த வன்முறைகளுடன் தொடர்புபட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் அரசியல்வாதிகளை ஏற்றுக்கொண்ட காலம் முடிந்து விட்டது! அமைச்சர் விதுர தெரிவிப்பு

Leave a Reply