கிறிஸ்தவ ஆலயங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடும் பாதுகாப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில், புத்தளம் மாவட்டத்திலும் இன்று நள்ளிரவு முதல் இடம்பெறவுள்ள கிறிஸ்துமஸ் ஆராதனைகளுக்கு பெருந்திரளான மக்கள் வருகைத் தரவுள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை முதல் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் முடியும் வரையில் ஆலயங்களுக்கு வெளியில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சர்வமத தலைவர் ஸென்மேரிஸ் ஆலயத்தின் பிரதான போதகர் கெனடி தெரிவித்தார்.

மேலும், ஆராதனைகளில் கலந்து கொள்ள ஆலயங்களுக்கு வருகைத் தருவர்களிடம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் ஏப்ரல் 21இல் பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலையடுத்து குறித்த பாதுகாப்பு சென்ற வருடம் போன்று இம்முறையும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போதகர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை முழுவதும் அடுத்த ஆண்டு முதல் மின்சாரம் துண்டிக்கப்படலாம்?

Leave a Reply