அரசுக்கு எதிராக கற்பிட்டியில் தீப்பந்தப் போராட்டம்!

புத்தளம் – கற்பிட்டி, ஏத்தாளை, கஜூவத்தைப் பகுதியில் தீப்பந்தங்கள் ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.

மக்கள் விடுதலை முண்ணனியின் ஏத்தாளை வட்டார அமைப்பாளர் எம்.சி.எம்.அஸ்லம் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மூவின மக்களும் கலந்துகொண்டனர்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், எரிவாயு, பால்மா என்பவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் என்பவற்றை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தீப்பந்தம், எரிவாய சிலிண்டர், பாண் என்பனவற்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ‘அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறையுங்கள்’, ‘அடிக்காதே அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே’, ‘எரிவாயு பிரச்சினைக்கு தீர்வைத் தாருங்கள்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களையும் எழுப்பினர்.

அத்துடன், மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்க்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Leave a Reply