வேலை நிறுத்தத்தை ஜனவரி 3ஆம் திகதி வரை ஒத்திவைக்க முடிவு! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

தற்போது நடைபெற்று வரும் வேலை நிறுத்தத்தை ஜனவரி 3ஆம் திகதி வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது என வடக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார அமைச்சினால் எமது கோரிக்கைகளுக்காக வெளியிடப்பட்டுள்ள பதில் கடிதமானது, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாததுடன், தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு இந்த கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வருகின்ற கிறிஸ்மஸ், புதுவருட உற்சவ காலத்தையும் கருத்தில் கொண்டே ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் திருத்தங்களைச் செய்ய அமைச்சு தவறினால், வரும் 3ஆம் திகதி நடக்கவிருக்கும், அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் இன்னும் தீவிர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக கற்பிட்டியில் தீப்பந்தப் போராட்டம்!

Leave a Reply