மலையடி பிள்ளையார் சிலைக்கு மேல் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை போராட்டம்!

மூதூர் 64ஆம் கட்டையில் உள்ள மலையடி பிள்ளையார் சிலைக்கு மேல் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

மூதூர் 64ஆம் கட்டையில் உள்ள மலையடி பிள்ளையார் சிலைக்கு மேல் திடிரென நேற்றிரவு புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை காலை 09.00 மணியளவில் 64ஆம் கட்டை மலை பிள்ளையாருக்கு முன் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

ஆகவே, குறித்த பகுதிக்கு சைவசமய நலன் விரும்பிகள் வருகை தந்து போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு, ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Leave a Reply