யாழ்ப்பாணம் – வலி. தென்மேற்கு பிரதேச சபை அமர்வில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கண்டித்து மரவள்ளி கிழங்கு சாப்பிட்டும், தீப்பந்தம் ஏந்தியும் போராட்டம் இடம்பெற்றது
வலிகாம் தென்மேற்கு பிரதேச சபை அமர்வு இன்று தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது.
அமர்வின் இடைவேளையின்போது உறுப்பினர்கள் தீப்பந்தம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, நாட்டில் விலைவாசி அதிகரிப்பினால் மக்கள் படும் துன்பங்கள், எரிவாயு வெடிப்பு, உணவு தட்டுப்பாடு என்பவற்றை குறிக்கும் முகமாக தீப்பந்தம் ஏந்தியும், விறகு கட்டுக்கள், பாண், மரவள்ளிக் கிழங்கு என்பவற்றினை ஏந்தியும் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் இறுதியில் மரவள்ளி கிழங்கு தீயில் போடப்பட்டது. தொடர்ந்து தேனீர் இடைவேளையின்போது உறுப்பினர்களுக்கு மரவள்ளி கிழங்கும் பாணும் சம்பலும் வழங்கப்பட்டது.






