அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் சார்ஜெண்ட் , இரண்டு T56 ரக துப்பாக்கிகள் மற்றும் 19 துப்பாக்கி ரவைகள் என்பவற்றுடன் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பொலிசாருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவத்தில், கல்முனை பாண்டிருப்பை பிறப்பிடமாக தமிழ் பொலிசார் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
சரணடைந்துள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






