புத்தளத்தில் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிய மக்கள்

புத்தளத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.

உலக முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று கொண்டாடும் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் புத்தளம் சாந்த மரியா ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.

நீராடி புத்தாடைகளை அனிந்து மக்கள் ஆலயத்திற்கு வருகைத் தந்து திருப்பலியில் ஈடுபட்டனர்.

ஆலய அருட்தந்தை பயார்ஸ் கெனடி பெர்னாண்டோவின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.

இதன்போது ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

கொரோனா தொற்று பரவலினால் பக்தர்கள் முகக்கவசங்களை அணிந்த வண்ணம் ஆராதனைகளில் கலந்து கொண்டனர்.

மேலும் ஆலயத்திற்கு வருகைத் தந்தவர்களிடம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சோதனைகளை முன்னெடுத்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21இல் பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட மிலேச்சர்தனமான தாக்குதலையடுத்து குறித்த பாதுகாப்பு சென்ற வருடம் போன்று இம்முறையும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு கொவிட் தொற்று காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம் ஒரு இக்கட்டன நிலையில் காணப்பட்டவேளை இந்த ஆண்டு ஓரளவுக்கு சுமூகமான நிலைக் காணப்படுவதால் மக்கள் மிக மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிவருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

Leave a Reply