நம்மைக் காட்டிலும் வறியவர்களிடத்தே கருணை புரிவோம்! விஜயகலா எம்பி

நம்மைக் காட்டிலும் வறியவர்களிடத்தே கருணை புரிவோம் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது கிறிஸ்மஸ் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான கிறிஸ்மஸ் திருநாளை முன்னிட்டு, அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர – சகோதரிகளுக்கு உள்ளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித நேயத்தை காப்பதற்காக இப்பூவுலகில் அவதரித்து, பல்வேறு இன்னல்களைத் தாங்கிய புனித இயேசு கிறிஸ்து பிறந்த நன்னாளைப் போற்றும் வகையில் கிறிஸ்மஸ் திருநாள் கொண்டாடப்படுகிறது.

குன்றாத அன்பையும் மன்னிப்பையும் நமக்குப் பரிசாகத் தந்தவர் இயேசு. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை உணர்த்தும் வகையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நமக்குப் போதிக்கும் நன்னாள் இத்திருநாளாகும்.

இத்தருணத்தில், இயேசு கிறிஸ்துவின் போதனைகளை முழுமையாக நாம் கடைப்பிடிப்போம்.

நம்மைக் காட்டிலும் வறியவர்களிடத்தே கருணை புரிவோம்; அமைதி, பொறுமை மற்றும் நல்லிணக்கம் என்னும் வலுவான அடித்தளத்தில் சிறப்பான உலகைக் கட்டமைக்க நம்மால் இயன்ற வகையில் பங்காற்றுவோம்.

இத்திருநாள் நம் வாழ்வில் எல்லையற்ற மகிழ்ச்சியை வாரி வழங்கட்டும். நாம் அனைவரும் உரிய ‘கொவிட்’ நெறிமுறைகளைப் பின்பற்றி கிறிஸ்மஸ் திருநாளைக் கொண்டாடுவோம் என மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply