மலையகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்ட நத்தார் பண்டிகை

நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.

மலையகத்தில் இன்று கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இயேசு பிறப்பையொட்டி கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் அட்டன் திருச்சிலுவை தேவலாயத்தில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று, அருட் தந்தை நியூமன் பீரிஸ் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

தேவலாயத்திற்கு வெளியே பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply