வவுனியா சிறைச்சாலை கைதிகளுக்கு பரிசுப்பொதிகள் வழங்கி வைப்பு

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தினை முன்னிட்டு சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக கைதிகளுக்கு பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

சிறைச்சாலை கைதிகளின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கனடா ஜீவாவதி கிறிஸ்தவ தேவாலயத்தின் நிதி அணுசரனையில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் மஅற்றும் விளக்கமறியல் கைதிகள் என 209 கைதிகளுக்கு ஒவ்வொன்றும் சுமார் 1500 ரூபா பெறுமதியான பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

சிறைச்சாலை கைதிகளின் நலன்புரி உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் இணைந்து கைதிகளுக்கு இவ் பரிசுப்பொதியினை வழங்கி வைத்திருந்தனர்.

Leave a Reply