12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை அவரது கால்களைப் பிடித்து பாலத்திலிருந்து ஆற்றில் வீசிய பல்கலைக்கழக மாணவன் ஒருவரைக் கைது செய்ததாக கொடக்கவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கல்வி நடவடிக்கைக்காக சென்றுக்கொண்டிருந்த தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு ஆற்றில் வீசப்பட்டுள்ளார்.
பிரதேச மக்களால் மீட்கப்பட்ட இம்மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரான பல்கலை மாணவன் கைது செய்ப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கொடக்க வெலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






