மூதூர் – நெய்தல் நகர் பகுதியிலிருந்து 2020 ஆம் ஆண்டு பல்கலை கழகம் தெரிவு செய்யப்பட்ட 43 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (24) மாலை நெய்தல் நகர் மஸ்ஜிதுல் ஹிழ்று ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வினை மூதூர் – நெய்தல் நகர் ஹிழ்று ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவமாணவிகளும், அம்மாணவர்களின் பெற்றோர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகளாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், நெய்தல் நகர் ஹிழ்று ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






