முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர்க்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து குறித்த சந்தேக நபர் வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்படவுள்ளார்.