சு.க. வெளியேறினாலும் பாதிப்பு இல்லை! ‘மொட்டு’ தெரிவிப்பு

‘அரச பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தத் தரப்புடன் இணைந்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றிக்குத் தடையாக இருக்காது.’ ஏன இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

ஜே.வி.பியுடன் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவே உள்ளது என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே, மொட்டு கட்சி தரப்பிலிருந்து இந்தப் பதிலடி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிக்கையில்,

சுபீட்சமான எதிர்காலக் கொள்கையைச் செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்கின்றோம்.

கடந்த இரண்டு வருடங்களாகக் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுக்கவுமே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இது புரியாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருக்கின்றது. அவர்கள் எவருடன் இணைந்தாலும் அது எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார்.

எஸ்.ரி.எப். சுற்றிவளைப்புகளில் 10 பேர் சிக்கினர்!

Leave a Reply