மாத்தறையில் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்திற்குள் பொறுப்பதிகாரி, புதிதாக காவல்துறை சேவையில் இணைந்துக்கொண்ட பெண் காவல்துறை உத்தியோகஸ்தரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை மாவட்டம் கந்தர காவல் நிலைய பொறுப்பதிகாரி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மாத்தறை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாத்தறை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஸாந்த டி சொய்சாவின் ஆலோசனைக்கு அமைய, சம்பவம் குறித்து விசேட காவல்துறை குழு நடத்திய விசாரணைகளை அடுத்தே பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.






