மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிர்காமர் வீதி கிராமத்திற்குள் புகுந்த முதலையொன்றைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மட்டிக்களி – கதிர்காமர் வீதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உலாவிய குறித்த முதலையைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த இடத்திற்கு வந்த கல்லடி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், முதலையைப் பாதுகாப்பாக மீட்டு செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகிலுள்ள குளம் ஒன்றில் விடுவித்துள்ளனர்.
சுமார் 07 அடி நீளத்தினைக்கொண்ட குறித்த முதலை கிராமத்திற்கு அருகாமையிலுள்ள தோனா பகுதியிலிருந்து வந்திருக்கலாமென அப்பகுதி மக்கள் தெரிவித்ததுடன், அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் அதனைப் பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.







