தடுப்பூசி போட்ட தாதியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டவர் கைது!

முல்லைத்தீவு – மாங்குளம் ஆதார மருத்துவமனையில் கொரோனாத் தடுப்பூசி போட்ட தாதி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு, நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு: காவல் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கைது!

Leave a Reply