முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணமல்போன 13 வயது சிறுமி 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறுமியின் கொலை தொடர்பில், சிறுமியின் தாய், தந்தை மற்றும் அக்கா ஆகியோரை கடந்த 23ஆம் திகதி கைது செய்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய 48 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று சந்தேக நபர்கள் மூவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட சிறுமியின் அத்தான் கடந்த 22 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில், மேலும் ஒரு சந்தேக நபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்ட தாதியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டவர் கைது!






