அரியாலையில் மணல் கடத்தலில் ஈடுபட்டோர் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – அரியாலை நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்தபோதும் நிறுத்தாமல் சென்றதனால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்ததுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அரியாலை முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என்பவரே காயமடைந்தார்.

அவர் பொலிஸ் காவலில், யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், மணல் ஏற்றிய உழவு இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply