
நாட்டில் அதிகரித்துள்ள பொருள்களின் விலையேற்றத்தை கண்டித்து, மல்லாகம் பழம்பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்த தீப்பந்தப் போராட்டம் காங்கேசன்துறை வீதியி ஊடாகச்சென்று சுன்னாகம் சந்தியில் நிறைவடைந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை தொகுதி அமைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த தீ பந்த போராட்டத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.





