எவரெடி…

எவரெடி விளையாட்டு கழகத்தின் “டெங்கு இல்லாத பிரதேசம்” எனும் தொனிப்பொருளில் சிரமதானம் நாளை (26.12.2021)

கல்முனை எவரெடி கழகத்தின் டெங்கு இல்லாத பிரதேசம் எனும் தொனிப் பொருளில் நாளை அதாவது 26.12.2021அன்று மாபெரும் சிரமதானம் கல்முனை பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.

கல்முனை எவரெடி விளையாட்டு கழகத்தின் இவ் வேலைதிட்டமானது கடந்த காலத்தில் நிலவிய கொவிட் தொற்று காரணமாக முடங்கி போயிருந்த நிலையிலும் தற்போது மழைக்காலம் என்பதால் அதிக டெங்கு தொற்று அபாயம் ஏற்படும் காலம் காணப்படுவதாலும் இச் சிரமதானத்தை மேற்கொள்ள உள்ளதோடு மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்கவுள்ளனர்.

சமூகத்திலும் பிரதேசத்திலும் இருக்கும் அக்கறையின் அடிப்படையில் செய்யப்படும் இக் களப்பணிக்கு அனைத்து பொது மக்களையும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகின்றனர்.

Leave a Reply