
பெரியநீலாவணை ஆலயடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினரால் ஆரூடக வருட பஞ்சாங்க நாட்காட்டி வெளியீடு!
(அரவி வேதநாயகம்)

பெரியநீலாவணை ஆலயடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினரால் 2022ம் ஆண்டான ஆரூடக வருடத்திற்கான வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி இன்று (25) வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
ஆலைய முன்றலில் அறங்காவல் சபையின் தலைவர் வி.விமல்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாட்காட்டியினை வெளியிட்டு வைத்தார்.
அரசியல் பிரமுகர்கள், ஓய்வுநிலை கல்வி திணைக்கள அதிகாரிகள், ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஆலய பிரதம குரு வண. விஜயவர்ம குருக்கள் சமயக் கிரிகைகளை மேற்கொண்டதுடன் எதிர்வரும் 2022 ம் ஆண்டிற்கான வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி பிரதம அதிதியினால் வெளியிட்டு வைக்கப்படது.
ஆலயடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் 2004 ம் ஆண்டு இலங்கையை தாக்கிய மிகமோசமான ஆழிப்பேரலையின் காரணமாக முற்றாக சேதமானதுடன் 2018 ம் ஆண்டு 14 வருடங்களின் பின்னர் கும்பாபிசேகம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





