நாளை தொடக்கம் முடங்குகின்றன ரயில் சேவைகள்!

நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம் சகல சேவைகளிலிருந்தும் விலகத் தீர்மானித்துள்ளதாகவும், தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் அதிபர்கள் தற்போதுவரை பொதிகளைச் சேகரித்தல் மற்றும் பயணச் சீட்டு விநியோகம் ஆகிய பணிகளிலிருந்து விலகியுள்ளனர். இந்தநிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை அவர்கள் நேற்று அறிவித்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் நேற்றும் பேச்சு நடத்தப்பட்டது. எனினும், சாதகமான தீர்வு கிடைக்கவில்லை. அதனால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பமாகிறது என்று, சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply