பிள்ளையார் கோயில்களை அழிக்கும் கிறிஸ்தவர், முஸ்லிம்களுக்கு உரித்தான நாடல்ல இலங்கை! சச்சிதானந்தம்

பிள்ளையார் கோயில்கள் சாத்தானின் கோயில்கள் எனக் கிறித்தவர் கருதினால் பிள்ளையார் கோயில்கள் உருவ வழிபாட்டு இடங்கள் காபிர்களின் உறைவிடங்கள் என முகமதியர் கருதினால், இலங்கை அவர்களுக்குரிய நாடு அல்ல.அவர்கள் கருத்தும் அவர்கள் நோக்கமும் கொண்ட நாடுகள் பல உலகில் உள்ளன.

இவ்வாறு ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவரும் சைவப் பெரியாருமான மறவன்புலவு க. சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் பகுதியில் களவாடப்பட்ட பிள்ளையார் சிலைகள் தொடர்பில் பொலிஸார் ஒருவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பல சைவ ஆலயங்களில் களவாடப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன. இது குறித்து நேற்று மறவன்புலவு சச்சிதானந்தம் விடுத்த அறிக்கை வருமாறு,

“சூசைராசா கஜீபன் கிறித்தவர். வலிகாமத்தில் உடைத்த பிள்ளையார் சிலைகள் தொடர்பில் முதலில் கைதானவர் சூசைராசா. அந்தப் பிள்ளையார் சிலைகள் போய்ச் சேர்ந்தன முகமதியரின் வணிக நிறுவனத்திடம். கொழும்பு ஆர்மர் தெரு பாத்திமா பள்ளிக்கு முன்புள்ள முகமதியர் வளாகத்தில் வலிகாமம் சிலைகள் உள்ளிட்ட 17 பிள்ளையார் சிலைகள் பல சிவலிங்கங்கள் மற்றும் சைவக் கோயில் சிலைகளை இன்று (நேற்று) கண்டுபிடித்த காவல்துறையினரைப் பாராட்டுகிறேன்.

“இந்தச் சிலைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் வழிபட்ட தொல்லியல் கூறுகள். இவற்றை உடைத்தவர், இவற்றைப் பெயர்த்தவர், இவற்றைக் கொண்டு சென்ற வாகனத்தார், சேமித்து வைத்த முகமதிய வளாகத்தார் யாவரையும் தொல்
பொருளியல் சட்டங்களில் பிணையில் விடமுடியாத சட்டங்களின் கீழ் கைது செய்து உடனடியாக சிறையில் அடைக்கு
மாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்

“சைவர்களின் நம்பிக்கையின் அடையாளம் பிள்ளையார். சைவர்களின் உணர்வுகளின் உறைவிடம் பிள்ளையார். கிறித்தவர் உடைக்கிறார். முகமதியர் பின்னணியில் உள்ளார். ஆபிரகாமிய மதத்தவர் இலங்கைச் சைவ மரபுகளை உடைத்தெறியும் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு எனக்கொள்ளலாமா?

“வலிகாமத்தில் நிகழ்ந்தவை முதல் நிகழ்வுகள் அல்ல. ஏற்கனவே வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப்பகுதி,
வன்னியில் போர்க்காலத்தில் உயர்பாது காப்பு வலயங்களின் நிகழ்வுத் தொடர்ச்சியே கடந்தவாரம் வலிகாமத்தில் 5 பிள்ளையார் கோவில் சிலைகள் உடைப்பு, கிறித்தவரும் முகமதியரும் சைவ மரபுகளை அழிக்க உந்துதல் கொடுப்பவர் யார்?

“வவுனியா செட்டிகுளம் மன்னார் தள்ளாடி, ஆட்காட்டி வெளி, வெள்ளாங்குளம், சிலாவத்துறை, மடு – பரப்புக்கடந்தான்,
பூநகரி கேரதீவு, தென்மராட்சி – மிருசுவில், அம்பாறை கஞ்சிக்குடியாறு எனத் தொடர்ச்சியாகப் பிள்ளையார்
சிலைகளை உடைப்பதிலும் பிள்ளையார் கோயில்களை அகற்றுவதிலும் ஆகக் கிறித்தவரும் முகமதியரும் இணைந்து முனைந்துள்ளனர்.

“கிறித்துவ மதத் தலைவர்களோ முகமதிய மதத் தலைவர்களோ தத்தம் மதத்தவர் இவ்வாறு செய்வதால் இலங்கையில்
மத நல்லிணக்கம் சிதறும் தமிழரிடையே பிளவு வரும் என்பதை வெளிப்படையாகக் கூறவில்லை. சைவரிடம் மன்னிப்புக் கோரவில்லை.

“கிறித்தவ மதத் தலைவர்கள் மன்னார், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களிலும் பிள்ளையார் சிலைகளை உடைப்பதை ஊக்குவிக்கிறார்கள். இப்பொழுது வலிகாமத்தில் நிகழ்ந்தவற்றை கிறித்தவ, முகமதிய மதத்தலைவர்கள் ஊக்குவிக் கிறார்களா? வெளிப்படையாக அவர்கள் சொல்ல வேண்டும்.

“பிள்ளையார் கோயில்கள் சாத்தானின் கோயில்கள் எனக் கிறித்தவர் கருதினால்,பிள்ளையார் கோயில்கள் உருவ வழிபாட்டு இடங்கள் காபிர்களின் உறைவிடங்கள் என முகமதியர் கருதினால், இலங்கை அவர்களுக்குரிய நாடு அல்ல. அவர்கள் கருத்தும் அவர்கள் நோக்கமும் கொண்ட நாடுகள் பல உலகில் உள்ளன.

“சைவக் கோயில்கள் உள்ள நாடுகளே திருக்கயிலாயம் தொடக்கம் கதிர்காமம் வரை நீண்டு காந்தாரம் தொடக்கம் ஐராவதி வரை அகன்ற பரத கண்டம் யுகங்கள் ஊடாகப் பிள்ளையாரை வழிபட்டு வந்தவர்கள் வருபவர்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்பவர்கள்.

தமிழர், சிங்களவர் என வேறுபாடின்றி அனைவரும் பக்தியோடும் பரவசத்தோடு உணர்வோடும் மண்ணின் மைந்தர்களாய்ப் பிள்ளையாரை வழிபடுகின்ற தீவே இலங்கைத் தீவு.

“இங்குள்ள பிள்ளையார் கோவிலை இடிக்க முயல்பவர்கள் ஆபிரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள். பிள்ளையார்
கோவிலை உடைக்க ஊக்குவிக்கும் ஆபிரகாமிய மதக் கும்பல்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறினால் சைவர்கள் தம்
உணர்வின் அடையாளங்களை, தம் நம்பிக்கையின் இருப்பிடங்களைப் பக்தியோடும் வழிபாட்டோடும் பண்பாட்டோடும் இணைத்துத் தம் முன்னோர் விட்ட வழியில் வாழ்வர்” – என்றுள்ளது.

எரிவாயு சிலிண்டர் வெடிப்புகளை தடுக்கும் சாதனம்; கல்முனை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு!

Leave a Reply