மூதூரில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 17 வருட பூர்த்தியின் ஞாபகார்த்த தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மூதூரில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

அத்தோடு சுனாமி அனர்த்தத்தினால் மூதூரில் உயிர் நீத்தவர்கள், காயப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தோரின் பிள்ளைகளுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.அத்தோடு பயன்தரும் மரக்கன்றுகளும் நட்டுவைக்கப்பட்டன.

சுனாமி பேனர்த்தத்தில் மூதூரில் மாத்திரம் 286 நபர்கள் உயிர்நீத்ததோடு, 600 க்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வினை மூதூர் ஈராக் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ்,மூதூர் ஈராக் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஜவாத் ஹாஜி, மற்றும், சுனாமி அனர்த்தில் உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply