கிண்ணியாவில் சுனாமி ஆழிப்பேரலையின் 17 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

கிண்ணியா பிரதேச செயலகமும் அல் ஹிதாயா மீனவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு இன்று(26) காலை தோனா கடற்கரை மீனவர் சங்க கட்டிட வளாகத்தில் இடம் பெற்றது.

17 ஆவது வருட ஆழிப்பேரலை இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் மற்றும் இரானுவ பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சுனாமி ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக மௌன அஞ்சலியும் இடம் பெற்றது.

இதன் போது பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள்,குர்ஆன் பிரதிகளும் வழங்கப்பட்டன. ஆழிப்பேரலை நினைவாக மரநடுகையும் மீனவர் சங்க கட்டிட வளாகத்தில் இடம் பெற்றது.

கிண்ணியா கடலூர் முருகன் கோயிலும் சுனாமி ஆழிப்பேரலை நிகழ்வு உணர்வு பூர்வமாக கோயில் வளாகத்தில் இடம் பெற்றது.

கோபால சிங்கம் புகிந்தன் சர்மா குருக்கள் விசேட பூஜை வழிபாடுகளை நடாத்தினர். பொது மக்கள் இணைந்து கோயிலுக்கு முன்னால் உள்ள கடலில் மலர் தூவி தங்களது அஞ்சலியினை கண்ணீர் மல்க செலுத்தினர்.

Leave a Reply