உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

1989 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2000 களின் முற்பகுதியில், விண்வெளியில் ஏவப்படும் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த தொலைநோக்கியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

பூமியிலிருந்து விண்ணில் உள்ள பல நட்சத்திரங்களை அறிவதற்காக விண்வெளியில் தொலை நோக்கியை நிலைநிறுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர்.

அதன் அடிப்படையில் நாசா ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலை நோக்கியை விண்ணில் செலுத்த திட்டமிட்ட நிலையில் அந்த திட்டம் நிறைவேறியுள்ளது.

இந்நிலையில், இந்த விண்வெளி தொலைநோக்கி அதிநவீன ராக்கெட் மூலம், பிரெஞ்சு கயானாவில் உள்ள ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் இது சுமார் 9,30,000 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டதாக நாசா அறிவித்தது.

Leave a Reply