புத்தளத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.
2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களை நினைவுகூறி இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட அர்ச அதிபர் கே.ஜீ. விஜேசிரி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், விமானப்படையினர், இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு 9 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.
அதன்பின் 9.25 மணியளவில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி கேட்போர் கூடத்தில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்களினால் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது. இதனையடுத்து மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.






