
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
அதன்படி, ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு முன்னால் இந்த அஞடசலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும கலந்துகொண்டனர்.





