நுவரெலிய – புசல்லாவை வாகன விபத்தில் ஒருவர் பலி

நுவரெலிய – புசல்லாவை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாடின்மையால் நிறுத்தி வைத்திருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்ததோடு, பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ பொலிஸார் மேற்கொன்டு வருகின்றனர்.

Leave a Reply