புத்தளம் 4ஆம் கட்டை ரஹ்மத் நகர் பகுதியில் அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமாக வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகை கடற்சங்குகளுடன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நவடிக்கையின்போதே, 3 உரைகளில் மறைத்து வைத்திருந்த 487 கடற்சங்குகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்சங்குகள் இந்தியாவிற்கு இரகசியமாக விற்பனை செய்வதற்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடற்சங்குகள் கற்பிட்டி மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








