மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று மதியம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் வயது 51 என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.






