மது உற்பத்தியால் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என நினைப்பது முட்டாள்தனம்! சோபித தேரர்

மக்களை குடிக்க வைத்துவிட்டு நாட்டின் எரியும் பிரச்சினைகளை மறப்பிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என வண. எல்லாவல சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டு மக்களுக்கு உணவும், பானமும் இல்லை. எரிவாயு இல்லை, அந்நிய செலாவணி இல்லை, நாடு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மூன்று மதுபான தொழிற்சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது நிதி திணைக்களத்தினால் கலால் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

மது உற்பத்தியால் நாட்டின் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று நினைப்பது முட்டாள்தனம்.

இலங்கையில் மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் ஏனைய நாடுகளில் 55 வீத மதுபான பாவனை வீதம் காணப்படுகின்ற அதேவேளை, இலங்கையில் 95 வீத அதிகரிப்பு காணப்படுகின்றது.

‘அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்’ – கொத்மலையில் தீப்பந்த போராட்டம்!

Leave a Reply