
பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் (வயது-78) நேற்று இரவு உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ் மட்டுமல்லாது பிற தென்னிந்திய மொழி திரைப் படங்களிலும் பாடியுள்ள மாணிக்க விநாயகம், பல தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
மாணிக்க விநாயகம் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா என்பவரின் இளைய மகன். தனுஷ் நாயாகனாக நடித்த திருடா திருடி, விஜய் நாயகனாக நடித்த வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்கள் இவர் நடித்த படங்களில் சில.
இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.