வடமாகாணத்தில் நாளை சனிக்கிழமை பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்ப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மின்மார்க்கங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 08.00 மணியில் இருந்து மாலை 05.00 மணிவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா பிிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம்
மணியந்தோட்டம் ஐஸ் தொழிற்சாலை , ஏ.வி.வீதி கொழும்புத்துறை , கொழும்புத்துறை , மணியந்தோட்டம் , பாசையூர் , பாசையூர் ஈச்சமோட்டை வீதி , பெரிய கோவில் , புங்கங்குளம் கொழும்புத்துறை வீதி சந்தி , உதயபுரம் , தூதாவளை ஆகிய இடங்களில் மின் தடைப்படும்.
கிளிநொச்சி மாவட்டம்
66 ம் பிரிவு இராணுவ முகாம்- பூநகரி, இராணுவ ஆதார வைத்தியசாலை, பூநகரி பிரதேச செயலகம், கிளிநொச்சி மருத்துவமனை, இலங்கை தொலைத் தொடர்பு நிலையம் கிளிநொச்சி, நெற் களஞ்சிய சாலை, விக்ரமரத்ன ( பிறைவேற் ) லிமிடெட், 4 வது மைல் கல் பூநகரி, ஆனந்தபுரம் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை, பாரதிபுரம், இலங்கை மின்சாரசபை உப மின் நிலையம், ஞானிமடம், கௌதாரிமுனை, கனகாம்பிகைக்குளம், கறுக்காய்த்தீவு, கொல்லக்குறிச்சி தம்பிராய், கிருஷ்ணபுரம், மலையாளபுரம், நல்லூர் பூநகரி, நெற்பிளவு, பள்ளிக்குடா, பள்ளிக்குடா சுனாமித் திட்டம், பரமங்கிராய், செம்மண்குன்று, தம்பிராய், வாடியடி பூநகரி, வெட்டுக்காடு (கௌதாரிமுனை), வீரையடி, விநாசியோடை (கௌதாரிமுனை) பகுதிகளில் மின் தடைப்படும்.
முல்லைத்தீவு மாவட்டம்
விநாயகபுரம், மாங்குளம் நீதிமன்ற வளாகம், பனிக்கன்குளம், குழந்தைகள் மகிழ்ச்சி இல்லத்தடி, டயலொக் கோபுரம் – பனிக்குளம் , மாங்குளம் குடியிருப்பு ஆகிய இடங்களில் மின் தடைப்படும்.
வவுனியா மாவட்டம்
குருக்கள் புதுக்குளம் மணியர்குளம் , எல்லப்பர்மருதங்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடைப்படும்.