தோப்பூரில் நிலக்கடலை அறுவடை செய்கை வெற்றி

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை செய்கையானது வெற்றியளித்துள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்தமுறை மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை செய்கையில் மழைவீழ்ச்சி அதிகமானதால் விளைச்சல் குறைவடைந்ததாகவும் இம்முறை அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

நிலக்கடலையை கொள்வனவு செய்வதற்காக வெளிப்பிரதேசத்திலிருந்து அதிகளவான வியாபாரிகள் தோப்பூர் பிரதேசத்திற்கு வருகை தருவதையும் அவதானிக்க முடிகின்றது.

கடந்த முறை விலை குறைத்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இம்முறை ஒரு கொத்து 60 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் இதன் மூலம் அதிக இலாபம் கிடைத்துள்ளதாகவும் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply