கிண்ணியா நகர சபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் தோல்வி

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தில் உள்ள கிண்ணியா நகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

கிண்ணியா நகர சபை தவிசாளர் எச். எம். நளீமினால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் இன்று மாலை 2.30 மணிக்கு முன்வைக்கப்பட்டது.

இதன்போது, 13 பேர் கொண்ட இந்த சபையில் 13 உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர்.

இதில் 5 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 8 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இரு உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்து மூன்று உறுப்பினர்களில் ஒருவர் ஆதரவாகவும் இருவர் எதிராகவும் வாக்களித்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி சேர்ந்த இரு உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நான்கு உறுப்பினர்களில் இருவர் எதிராகவும் இருவர் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தார். இதேவேளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தார்.

கடந்த 14ஆம் திகதி 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, அப்போதும் சபையில் தோற்கடிக்கப்பட்டது.

இதில் ஒன்பது உறுப்பினர்கள் எதிராகவும் 7 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரத்திலுள்ள கிண்ணியா பிரதேச சபைக்கான வரவு செலவுத் திட்டமும் கடந்த வாரம் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா, சீனாவுடனான ஒப்பந்தங்கள் மூலம் அந்நிய செலாவணி நெருக்கடி தணியும்! ஜனாதிபதி நம்பிக்கை

Leave a Reply