நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் விசேட நடமாடும் சேவை!

நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் விசேட நடமாடும் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

அதற்கமைய, வடமாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில், பொது மக்களைப் பாதிக்கும் சட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதுடன், நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவுள்ளது.

போதைப்பொருள் பாவனை, காணிப்பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த நடமாடும் சேவையினூடாக ஆலோசனை வசதிகள் வழங்கப்படும்.

அதேவேளை, வேலைவாய்ப்பைப் பெறுதல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Leave a Reply