சர்வதேச பட்டத் திருவிழாவானது வல்வெட்டித்துறை பட்டப்போட்டி!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா, இந்தமுறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா- 2022” என்ற பெயரிடலோடு பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

குறித்த பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது.இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டை பிரதமரின் ஒருங்கிணைப்பாளரான கீதநாத் காசிலிங்கம் மேற்கொண்டிருந்தார்.

அதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” போட்டியை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முழு ஆதரவை வழங்குவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தில் யாழ். வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டத் திருவிழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply