நாட்டில் நிலவும் கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு பயணத் தடையை பிரித்தானியா நீடித்துள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, சிவப்பு பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள 64 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தடை இராஜதந்திரிகள், மருத்துவ சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிகள் மற்றும் ஏரோநாட்டிக்கல் பொறியாளர்கள் மற்றும் விமானிகள் மற்றும் குழுவினர், வெளிநாட்டு பிபிசி குழுவினர் மற்றும் குடிவரவு மற்றும் குடியேற்ற அதிகாரிகள் போன்ற சில குறிப்பிட்ட தொழில் வல்லுநர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.