அனுராதபுர வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

குருநாகல் அனுராதபுர வீதியின் கல்கமுவ,மாகல் கடவல பகுதியில் சிறிய ரக கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 47 வயதுகளையுடையவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply