இலங்கையில் தொடந்தும் வீழ்ச்சி காணும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் மேலும் 419 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 585,005 அதிகரித்துள்ளது.

மேலும் 21 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,944 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 559,875 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *