மூதூர் பிரதேச செயலகத்தின் ஊடாக உலக சிறுவர் தின போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட “முப்பது ரூபாய்” குறுந் திரைப்படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைக்க பெற்றன.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலை, ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் ராஜாங்க அமைச்சின் வழிகாட்டுதலில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் ” நம் கண்களால் நம் உலகம்” எனும் தொனிப்பொருளில் கோரப்பட்ட குறுந்திரைப்பட போட்டியின் திறந்த பிரிவில் “அனைவருக்கும் கல்வி ” என்பதனை இலக்காக வைத்து கொண்டு மூதூரைச் சேர்ந்த புகாரி நளீரினால் இயக்கப்பட்ட “முப்பது ரூபாய்” குறுந்திரைப்படம் மூதூர் பிரதேச செயலகத்தின் ஒழுங்கு படுத்தல் ஊடாக தேசிய அளவில் இடம் பெற்ற சிறுவர் தினப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த போட்டிக்கு நாடுமுழுவதும் இருந்து 101 குறுந் திரைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றுள்
12 விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் முப்பது ரூபாய் குறுந் திரைப்படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைக்க பெற்றமை குறிப்பிடத்தக்கது.
- சிறந்த இயக்குனர் ஜுரி விருது
02 சிறந்த படப்பிடிப்பு
03.ஜுரி சிறந்த நடிப்புக்கான விருது - சிறந்த தொகுப்புக்கான விருது
- சிறந்த ஒலி அமைப்புக்கான விருதுகள் கிடைக்க பெற்றன.
குறித்த நிகழ்வு கொழும்பு BMICH ல் நேற்று (28) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.





